ஒரு நாளைக்கு 6 லாரி தண்ணீரை செலவு செய்யும் டைரக்டர் ராம்!

Bookmark and Share

ஒரு நாளைக்கு 6 லாரி தண்ணீரை செலவு செய்யும் டைரக்டர் ராம்!

2007ல் கற்றது தமிழ் படத்தை இயக்கியவர் ராம். அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தங்க மீன்கள் என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். அந்த படத்திற்கு சிறந்த படத்துக்கான  தேசிய விருது கிடைத்தது.

மேலும், அப்பா-மகளின் பாசத்தை மையமாக வைத்து உருவான அப்படம் ராமிற்கு சினிமா மட்டுமின்றி ரசிகர்கள் வட்டாரத்திலும் நல்லதொரு இமேஜை ஏற்படுத்திக்கொடுத்தது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதால் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் ராம்.  

இப்போது வரை கிட்டத்தட்ட 80 சதவிகிதம் படத்தை முடித்து விட்டாராம். மேலும், தற்போது சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள ஸ்லம் ஏரியாவில் மழையில் நடப்பது போன்ற சில காட்சிகளை அவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார்.

சில நாட்களில் விடிய விடியகூட படப்பிடிப்பு நடக்கிறது. அப்படி ஒவ்வொரு நாளும் 6 லாரி தண்ணீர் வரை அந்த காட்சிகளுக்காக செலவிடப்படுகிறதாம். சின்னச்சின்ன கேரக்டர்கள்கூட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ராம், அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்கிறாராம்.

அதோடு, கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர் நடிகைகளை தேடிப்பிடித்து கிடைக்கிற வரைக்கும் பொறுமையாக காத்திருந்தும் படப்பிடிப்பை நடத்துகிறாராம்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions