ராம் சரண் தலைமறைவாகிறார்....!

Bookmark and Share

ராம் சரண் தலைமறைவாகிறார்....!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தலைமறைவாகிறார் என்றவுடன் அதிர்ச்சி அடைய வேண்டாம். அவர் தற்போது பிரபல இயக்குனர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஸ்போர்ட்ஸ் மேன் வேடம்.

இதற்காக ராம், ரொம்பவே மெனக்கட்டு வருகிறார். அவர் முற்றிலுமாக ஒரு அத்லட் போல அவதாரம் எடுக்க உள்ளார். இயக்குனர் ஸ்ரீனு வைட்லா ஒரு படத்தை இயக்கினால் அந்த அணியில் பிரபல கதாசிரியர்களான கொன வெங்கட் மற்றும்  கோபி  மோகன் ஆகியோர் கண்டிப்பாக இருப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக இயக்குனர் ஸ்ரீனு வைட்லாவுக்கும், அந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இவர்கள் மூவரும் மீண்டும் இந்த படத்தில் இணைவது கூடுதல் சிறப்பு.

இந்த புதிய படத்தின் இரண்டாம் பாதி கதைக்கு மெகா ஸ்டார் முக்கிய ஆலோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பற்றி ஒரு சிறிய விஷயம் கூட வெளியே வந்து விடக்கூடாது என்று இயக்குனர் கட்டளை இட்டுள்ளார்  என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக ஹீரோ ராம் சரணின் தோற்றம் பற்றி வெளியில் தெரியக்கூடாது  என்பதில் இயக்குனர் உறுதியாக இருக்கிறாராம். இதனால் ஹீரோ ராம் சரண் வெளியே தலை காட்ட மாட்டாராம். அதனால் இனி அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் காண முடியாது. அவர் கிட்ட தட்ட தலைமறைவு வாழ்கை தான் நடத்த உள்ளாராம்.

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions