மெகா தொகைக்கு மெகா பவர் ஸ்டாரின் புதிய படத்தின் விநியோக உரிமை

Bookmark and Share

மெகா தொகைக்கு மெகா பவர் ஸ்டாரின் புதிய படத்தின் விநியோக உரிமை

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது நடித்து வரும் ப்ரூஸ்லீ என்ற புதிய படத்தின் விநியோக உரிமை மிகப்பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்த படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் ரூ 6 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. உள்ளூரில் ராயலசீமா பகுதியின் விநியோக உரிமை சுமார் ரூ 8 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது.

இது போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பது என்பது ஒரு பிரபல ஹீரோவுக்கு ஏற்புடையதாகவே கருதப்படுகின்றது.

மேற்கூறிய தகவல்கள் உண்மை எனில் ராம் சரண் ஒரு ரெகார்ட் ஏற்படுத்தி இருக்கிறார் என்று தான் அர்த்தமாகின்றது. இந்த படத்தில் பிரபல முன்னாள் நடிகையான நதியா ஒரு பவர்புல் வேடத்தில் நடிக்கிறாராம்.

டி.வி.வி. எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தானைய்யா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீனு வைட்ல இயக்குகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், தங்கையாக கிருதி கந்தர்பா நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகையையொட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions