கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் சரண்-அர்ஜுன்

Bookmark and Share

கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் சரண்-அர்ஜுன்

வித்தியாசமான படங்களை தந்து டோலிவுட்டில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்டது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ். தற்போது மீண்டும் ஒரு புதுவிதமான அதுவும் டோலிவுட் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

சமீபத்தில் தான் இந்த நிறுவனம் தமிழில் அவர்களது முதல் ரிலீசான டார்லிங் என்ற வெற்றிப் படத்தை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்துக்கும் சரண் - அர்ஜுன் என பெயரிட்டுள்ளார்கள்.

இப்போது புரிந்திருக்கு உங்களுக்கு இது ஏன் இன்ப அதிர்ச்சியாக இருக்குமென்று, ஆம் இரண்டு டோலிவுட் இளம் சூப்பர் ஸ்டார்களின் பெயரை கொண்ட இந்த தலைப்பில் ராம் சரணும், அல்லு அர்ஜுனும் நடிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் நடிப்பில் வெளிவந்த கரண்-அர்ஜுன் படத்தின் ரீமேக்காக இந்த படம் இருக்கலாமென்றும், அப்படியில்லையெனில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட ஒரு புது கதையை உருவாக்கி எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருந்தா என்ன நேரம் சரியா இருந்தா எல்லாமே நடக்கும், நல்லாவே நடக்கும்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions