லிங்கா படம் நஷ்டம் : சிரஞ்சீவி உஷார்

Bookmark and Share

லிங்கா படம் நஷ்டம் : சிரஞ்சீவி உஷார்

‘லிங்கா'  படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கி இருப்பதை கண்டு சிரஞ்சீவி உஷார் ஆனார். சிரஞ்சீவி தனது 150 வது படத்தில் நடிப்பது பற்றி கடந்த 2 வருடமாக ஆலோசித்து வருகிறார்.

இதுவரை பொருத்தமான கதை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் ஸ்கிரிப்ட் தேடி வருகிறார். இதற்கிடையில் தமிழில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ‘லிங்கா‘ படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை ரஜினி திருப்பி தர வேண்டும் என்று கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர்.

இது சிரஞ்சீவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது படத்துக்கு இப்படியொரு நிலை வந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று நெருக்கமானவர்களிடம் கூறி இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க வருவதால் அவர் படத்தை தயாரிக்க எவ்வளவு கோடியும் செலவு செய்ய சில தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் அதை சிரஞ்சீவி விரும்பவில்லை. பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் போட்ட முதலீடு கிடைக்காத அளவுக்கு பட்ஜெட்டோ பட பிசினஸோ இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம். முதலில் ஓகே சொல்லிவிட்டு தயாரிக்க முன்வருபவர்கள் பின்னர் அப்படத்தை அதிக விலைக்கு விற்றால் அதை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தயாரிப்பு பொறுப்பை மகன் ராம் சரணிடம் விட்டிருக்கிறார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions