நாங்களே ரிஸ்க் எடுக்கிறோம் - ராம் சரண்

Bookmark and Share

நாங்களே ரிஸ்க் எடுக்கிறோம் - ராம் சரண்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரது மகனும், பிரபல நடிகருமான ராம் சரண் தயாரிக்க இருப்பதை அனைவரும் அறிவர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. பிரபல கதாசிரியரான பி.வி.எஸ்.ரவி இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். இந்த படம் ஒரு மெகா மாஸ் என்டர்டைனராக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அதனை நாசுக்காக மறுத்த மெகா அப்பா, மெகா மகன், அந்த சுமையை தாங்களே ஏற்று கொள்ள இருப்பதாக கூறி உள்ளனர்.

அதாவது அந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 25 கோடி முதல் ரூ 35 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் தான் மெகா ஸ்டார் இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகின்றது.

மெகா ஸ்டாரை நம்பி எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் முதலீடு செய்ய பலர் தயாராக உள்ளனர். ஏனெனில் மெகா ஸ்டார் படம் எந்தளவிற்கு வெற்றி அடைந்து வசூல் மழை கொட்டும் என்பதனை அனைவரும் அறிவர்.

அப்படி இருந்தாலும், மெகா ஸ்டாரின் இந்த முடிவை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதாவது தங்கள் குடும்பமே இந்த படத்தின் மொத்த சுமையையும் தாங்க தயாராகி விட்டது என்று கூறிவிட்டதாகவே கருதப்படுகின்றது.

இந்த படத்தில் மெகா ஸ்டாருக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தினை வரும் 2016ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions