ராம் சரண்-பிரபாஸ் ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

ராம் சரண்-பிரபாஸ் ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள்!

மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் பாகுபலியில் இடம்பெறும் போர் காட்சிகளையும், மகாதீராவில் வரும் போர் காட்சிகளையும் இப்போதே அவர்களது ரசிகர்கள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதுவரையில் பிரம்மாண்டமான வகையில் மிகுந்த பொருட் செலவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படம்  மகாதீரா என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது  இந்நிலையில் பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி ஒரு பிரம்மாண்ட வரலாற்று படமான பாகுபலியை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபல ஹீரோ பிரபாஸ் மிகவும் வித்தியாசமாக நடித்து வருகிறார். அவர் போர் காட்சிகளில் கலக்கி இருப்பதை அந்த படத்தின் ட்ரைலர்களில் இருந்து அனைவரும் அறிந்து வைத்து உள்ளனர்.

மகாதீராவில் ஹீரோ ராம் சரண் போர் காட்சியில் 100க்கும் மேற்பட்ட வீரர்களை கொல்வார்.  அந்த படத்தில் காதல்பின்னணியும் இருந்தது. தற்போது பாகுபலியில் ஹீரோ பிரபாஸ் கொடுங்கோல் மன்னனிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறார்.

மேலும் அவருடைய சிறையில் இருக்கும் அம்மாவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் பிரபாஸ் இருப்பதாக தெரிகிறது. இரண்டு படங்களிலும் வீர, தீர காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை.

இந்த இரண்டு படங்களுக்கும் தொடர்பு இருந்தாலும் பாகுபலி வெளிவருவதற்குள் இந்த ஒப்பீடு அவசியமற்றது என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions