
இன்றைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படங்களை முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதில் நடிகர் ராம்சரண் படமும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது ராம்சரனின் புதிய படத்தின் மை நேம் இஸ் ராஜூ தயாரிப்பாளர் டி.வி.வி. தானய்யா பட்ஜெட் எகிறி இருப்பதால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது.
சமீப காலமாக டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் போன்ற இசையமைப்பாளர்களை தேர்வு செய்வது வாடிக்கையாகும். இந்நிலையில் ராம் சரண் இந்த புதிய படத்திற்காக அனிருத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
அனிருத்துக்கு ரூ.2.5 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர அந்த படத்தின் இயக்குனரான சீனு வைட்லாவுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால் படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
Post your comment