25 வருட சினிமா கேரியரில் முதல்முறையாக ராம் கோபால் வர்மா படத்துக்கு ‘யூ’

Bookmark and Share

25 வருட சினிமா கேரியரில் முதல்முறையாக ராம் கோபால் வர்மா படத்துக்கு ‘யூ’

ரத்த சரித்திரம், சத்யா, ரங்கீலா உள்பட தமிழ். தெலுங்கு, இந்தியில் படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. தாதா, ரவுடி என வன்முறை காட்சிகள் கொண்ட படங்களே நிறைய இயக்கி உள்ளார்.

சமீபத்தில் கிளுகிளுப்பு காட்சிகள் கொண்ட படத்தை ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்தார். இதற்கு நடிகை ஸ்ரீதேவி எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டராக இருக்கிறார் வர்மா.

60க்கும் அதிகமான படங்களை அவர் இயக்கியுள்ளார். இதுவரை வர்மா இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்குமே ஏ (வயது வந்தோர் மட்டும்) சான்றிதழ்தான் சென்சாரில் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் 25 வருட சினிமா வாழ்க்கையில் அவர் தற்போது இயக்கியுள்ள ‘365 டேஸ்’ தெலுங்கு படத்துக்கு முதன்முறையாக யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ‘காதல், பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இக்கதையில் வன்முறை, ரத்தம் சிந்தும் காட்சிகள் கிடையாது.

என அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி மேலும் கூறியபோது, ‘நந்து, அனைகா ஜோடியாக நடித்துள்ளனர். எனது திருமணத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகவில்லை.

ஆனால் எனக்கு நெருக்கமானவர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையை உள்ளடக்கிய கதை’ என்றார். 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions