ஜோதிலக்ஷ்மி படக்குழுவை புகழ்ந்த ராம் கோபால் வர்மா

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மி படக்குழுவை புகழ்ந்த ராம் கோபால் வர்மா

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், சார்மி நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் முதல் பாடல்கள் வெளியீட்டு அழைப்பிதழ் வரை சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் கவனத்தை கவர்ந்திருந்தன.

வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த ராம் கோபால் வர்மா, படக்குழுவினரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.  ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் படம் குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

அதில் கருத்தும் கதையும் சேர்ந்த இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல வந்த கருத்தை தெரிவித்திருப்பது அழகு என கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை சார்மி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நடித்த படங்களிலேயே இப்படம் சிறந்த படமாக அமைந்துள்ளது. நடிகர் சத்யாவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தனை பாராட்டுகளுக்கும் காரணம் படத்தின் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் என்று ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.  தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார்


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions