ஓட்காவை ஓரமா வைத்து விட்டு போய் தூங்குங்கள் - ராம் கோபால் வர்மா மீது அனுராக் காஷ்யப் காட்டம்

Bookmark and Share

ஓட்காவை ஓரமா வைத்து விட்டு போய் தூங்குங்கள் - ராம் கோபால் வர்மா மீது அனுராக் காஷ்யப் காட்டம்

தனது பாம்பே வெல்வேட் படத்தைப் பற்றி டுவிட்டரில் கடுமையாக விமர்சிக்கும் ராம் கோபால் வர்மாவை சாடும் வகையில் “ஓட்காவை ஓரமா வைத்திவிட்டு போய் தூங்குங்கள்” என கூறியுள்ளார் அப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்.

பெரிய முதலீடு, ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா போன்ற முக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர்கள் இணைந்து பணியாற்றிய படம் பாம்பே வெல்வெட். பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த வாரம் வெளியானது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாக்ஸ் ஆபிஸ் மற்றும் ரசிகர்கள் என இரண்டு தரப்பையும் படம் திருப்திபடுத்த தவறிவிட்டது. 

இது பற்றி இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பே வெல்வேட் படத்தையும், அதன் இயக்குனர் அனுராக் காஷ்யப்பையும் கிண்டல் செய்யும் வகையில் பல டுவிட்டுகளை போட்டு வந்தார்.

அந்த வரிசையில் நேற்று இரவு ராம் கோபால் வர்மா வெளியிட்ட டுவிட்டில் “ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படத்திற்கு அதன் இயக்குனர் ஆதரவாக பேசுவது எப்படி இருக்கிறது என்றால் ‘ஒரு பெண்ணை பார்த்து நான் என்னை ரொம்ப விரும்புகிறேன் எனவே நீ என்னை விரும்புகிறாயா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை’ என்று கூறுவது போல் இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இதுவரை ராம் கோபால் வர்மாவின் டுவிட்களுக்கு பதில் அளிக்காமல் இருந்த அனுராக், அவரின் எல்லா டுவிட்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக நேற்று நள்ளிரவு ஒரு டுவிட்டை பதிந்துள்ளார். அதில் குடித்து விட்டு உளராமல் போய் தூங்குங்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் “சார்... ஓட்காவை ஓரமா வைத்துவிட்டு போய் தூங்குங்கள். ஐ லவ் யு...லாட் ஆப் கிஸ்ஸ்” என கூறியிருந்தார்.

ஆனால் இதற்கும் அசராத ராம் கோபால் வர்மா, சார் “நான் குடிப்பதை விட்டு ரொம்ப நாள் ஆகிறது...மேலும் நான் ஆண்களை கிஸ் பண்ணுவது இல்லை...ஐ லவ் யு...” என கூறியுள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு பெரும் புகழ் பெற்று தந்த சத்யா போன்ற படங்களில் அனுராக் காஷ்யப் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions