திருடர்களே சசிகலாவிடமிருந்து திருட கற்றுக்கொளுங்கள்! ராம் கோபால் வர்மா

Bookmark and Share

திருடர்களே சசிகலாவிடமிருந்து திருட கற்றுக்கொளுங்கள்! ராம் கோபால் வர்மா

இயக்குனர் ராம் கோபால் வர்மா சமயத்திற்கு தகுந்தார் போல சமூக வலைதளங்களில் யாரையாவது சாடிப்பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

டோலிவுட் முதல் பாலிவுட் வரை இருக்கும் மிக முக்கிய நட்சத்திரங்களை வம்பிழுப்பது போல எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.

இப்போது அதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலே போய் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து வாய்க்கு வந்தபடி கருத்தை வெளியிட்டு வருகிறார்.

இதில் ஜெயிலில் இருக்கும் சசிகலா தான் சின்ன திருடியல்ல என்று சொன்னதாக கூறியுள்ளார். மேலும் அவர் திருடர்கள் சில நூறு ரூபாயை திருடுவதை விட 60 கோடியை திருட கற்றுக்கொண்டு முயற்சி எடுக்க வேண்டும்.

பிக் பாக்கெட், சிறு குறு திருடர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். நான் ஒன்று கேட்கிறேன். அன்றாட வாழ்க்கைக்காக சிறு திருடர்கள் 600 ரூபாய் கொள்ளையடிப்பது பெருங்குற்றமா?

இல்லை. மக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் சந்தோசத்திற்காக 600 கோடி ரூபாய் கொள்ளையடிப்பது குற்றமா என கேட்டுள்ளார்.

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் ஜெயலலிதா இறக்கவில்லை என சொல்கிறார்களே? அவர் என்ன திரும்ப வரவா போகிறார்.

தமிழ்நாட்டில் கற்பனை செய்யமுடியாதளவுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் திருப்பங்களுக்கு முடிவு கட்ட சமாதியிலிருந்து ஜெயலலிதாவின் ஆவி தான் வரவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவை தான் ஜெயலலிதா அடுத்த முதல்வராக அடையாளம் காட்டுவதற்கு பதிலாக ஓ.பி.எஸ் ஐ தானே காட்டினார் என கடுமையாக விளாசியுள்ளார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions