ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா

Bookmark and Share

ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா

காளைகளை டார்ச்சர் செய்யத் துடிக்கும் தமிழகத்தின் பெயரை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராம் கோபால் வர்மா திமிராக ட்வீட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள் என விமர்சித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏதாவது ட்வீட்டி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது போல. தமிழக மக்கள் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்காக போராடுவதை இழிவுபடுத்தி ட்வீட் போட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டின் பெயரை ஜல்லிக்கட்டு என்று மாற்ற வேண்டும் என பீட்டா ஐ.நா.விடம் கோரிக்கை விடுக்க வேண்டும். டார்ச்சர் செய்ய துடிக்கும் மாநிலத்திற்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கலாச்சாரமற்ற மாநிலம் என பதிவு செய்ய வேண்டும். 

பிரபலங்கள்

தமிழகத்தின் சர்வாதிகார அரசியல்வாதிகளை பார்த்து பிரபலங்கள் பயந்து நடுங்குகிறார்கள். அப்பாவி விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதில் இருந்தே அவர்களின் கோழைத்தனம் தெரிகிறது.

பீட்டா

பீட்டாவை குறிவைப்பதன் மூலம் ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்பது தெரிகிறது. அவர்களின் அறிவு ஆப்பிரிக்காவில் உள்ளவர்களை விட பின்னோக்கியுள்ளது.

த்ரிஷா

த்ரிஷாவை தாக்கியதன் மூலம் ஜல்லிக்கட்டு விலங்குகள் தாங்கள் அடக்க நினைக்கும் காளைகளை விட மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

அப்பாவி  விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஆதரிக்கும் மக்கள் தான் உண்மையான விலங்குகள் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கும் என நம்புகிறேன். 

காளைகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொருவரையும் ஆயிரம் காளைகளை விட்டு துரத்த விட வேண்டும். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் என்று பார்ப்போம்?


Post your comment





Related News
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பிரபாஸை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions