'மென்டல்' மூலம் ராம்கோபால் வர்மா ரிட்டர்ன்

Bookmark and Share

'மென்டல்' மூலம் ராம்கோபால் வர்மா ரிட்டர்ன்

சத்யா 2 படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். சத்யா கம்பெனி, சர்கார் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா படத்தின் இரண்டாம் பாகம், 2013ல் வெளிவந்தது.

அந்தபடம், இதுவரை பாலிவுட் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, சில காலம் அமைதியாக இருந்த ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறார்.

டிஸ்கா சோப்ரா, சச்சின் ஜோஷி  முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். சைக்காலஜிக்கல் திரில்லர் படமான மென்டல் படத்தை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா, XXX எனும் பெயரிலான படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட்டில் பரபரப்பின்றி இதுவரை ராம்கோபால் வர்மா இருந்திருந்தாலும், தென்னிந்திய திரையுலகில், இவரது இயக்கத்தில் ரெளடி, ஐஸ் கிரீம் மற்றும் கொலுசு உள்ளிட்ட படங்கள் வெளியான வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions