அட...இப்படி ஒரு வருத்தமா...!

Bookmark and Share

அட...இப்படி ஒரு வருத்தமா...!

தமிழிலிருந்து தெலுங்குக்கு படங்கள் மொழி மாற்றம் செய்யப்படுவதும், தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுவதும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிற ஒன்றுதான்.

சமீபகாலமாக தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள்தான் வெற்றியைப் பெற்று வருகின்றன. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்களை வாங்குபவர்கள் அவற்றை சரியாக விளம்பரப்படுத்துவதுமில்லை, பத்திரிகைகளிடமும் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவதுமில்லை.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'மகதீரா' படம் மட்டும்தான் ஓரளவிற்கு வெற்றி பெற்று ரசிகர்களைக் கவர்ந்தது.அந்தப் படத்தின் வெற்றி ஜோடியாக வலம் வந்த ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படம் தமிழில்  'ராம் லீலா' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த்ப் படத்தின் புகைப்படங்கள் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றைப் பார்த்த தெலுங்கு மீடியாக்களே ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்களாம். காஜல் அகர்வாலின் அட்டகாசமான கிளாமர் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.

தெலுங்கில் படம் வெளியான போது கூட இப்படிப்பட்ட புகைப்படங்களைக் கொடுக்கவில்லையாம்.காஜல் அகர்வாலின் கிளாமரைப் பற்றி ரசிகர்களுக்குத் தெரியும் என்றாலும் தெலுங்கில் படம் வெளியான போது ராம் சரண் தேஜாவை மட்டுமே முன்னிறுத்தி விளம்பரப்படுத்தி விட்டார்கள், காஜல் அகர்வாலின் இந்தப் புகைப்படங்களை அப்போது வெளியிட்டிருந்தால் படம் இன்னும் அதிகமாக ஓடியிருக்குமே என்று ரசிகர்களும், சில தெலுங்கு மீடியாக்களும் வருத்தப்பட்டுள்ளார்களாம்.

யுவன்ஷங்கர் ராஜா இசை, பிரகாஷ்ராஜ், ரகுமான், காஜல் அகர்வால் என்று சில தெரிந்த முகங்கள் 'ராம் லீலா' படத்தில் இருப்பதால் அதை தமிழில் சரியாக விளம்பரப்படுத்தினால் படம் நன்றாக ஓடும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறுவதுதான் அதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. என்னம்மா இப்படி வருத்தப்படறீங்களேம்மா....!


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions