ராக்ஷியுடன் ஊட்டியில் டூயட் பாடும் ராம்

Bookmark and Share

ராக்ஷியுடன் ஊட்டியில் டூயட் பாடும் ராம்

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் ராம் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கும் சிவம் படத்தில் நாயகனாக  நடித்து வருகின்றார்.  நடிகர் ராம் சிவம் படத்தில் மட்டுமல்லாது இயக்குநர் கிஷோர் இயக்கும் ஹரிகதா   படத்திலும் நாயகனாக நடித்து வருகின்றார்.  

ராம் நடித்து வரும் சிவம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராக்ஷி நடித்து வருகின்றார்.  இப்படத்தில் ராக்ஷி கண்ணா கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதாகக்  கூறப்படுகின்றது.  தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெறுகின்றது. படத்திற்கு தேவையான சில முக்கியமான காட்சிகளும் ராம் மற்றும் ராக்ஷி டூயட் பாடலும் ஊட்டியில் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions