திரைப்படமாகும் பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாறு

Bookmark and Share

திரைப்படமாகும் பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாறு

பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக உருவாக்கி வெற்றிகண்டு வருகின்றனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இந்தியாவின் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானியின் வாழ்க்கை வரலாற்றை விரைவில் திரைப்படமாக உருவாக்கவிருக்கின்றனர்.

ராமஜெத்மலானி இந்தியாவின் மிகத் திறமையான வழக்கறிஞர்களில் ஒருவர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர். நீதிபதி வாய்ப்பு இவரை தேடிவந்த போதிலும் அதை தவிர்த்துவிட்டு வழக்கறிஞராகவே பணியாற்றி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் வழக்குகளுக்கு இவர் வாதாடியுள்ளார். 

இந்நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான ரோணி, குணால், நடிகை சோகா அலிகான் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளார்களாம். ராம்ஜெத் மலானியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான, சிக்கலான சம்பவங்களை வைத்து இப்படத்தை உருவாக்கவுள்ளார்களாம். இதற்கான முறையான அனுமதியை ராம்ஜெத் மலானியிடம் வாங்கிவிட்டார்களாம். 

தற்போது ராம்ஜெத் மலானி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் பிற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions