மலையாள நடிகையுடன் ரொமான்ஸ் செய்த ராமகிருஷ்ணன்!

Bookmark and Share

மலையாள நடிகையுடன் ரொமான்ஸ் செய்த ராமகிருஷ்ணன்!

போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தை அடுத்து ராமகிருஷ்ணன் நடித்து வரும் படம் ஒரு கனவு போல. வித்தியாசமான காதல் கதையில் இந்த படம் தயாராகி வருகிறதாம். இந்த படத்துக்கு பிரபல மலையாள ஒளிப்பதிவாளரான அழகப்பன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வெயில் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த இவர் அதையடுத்து மலையாள படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வந்தார். அந்த வகையில், பல வருட இடைவெளிக்குப்பிறகு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும், விஜய்-அசின் நடித்த காவலன் படத்தில் மித்ரா குரியன் என்றொரு மலையாள நடிகை நடித்ததைத் தொடர்ந்து இந்த படத்தில் அமலா குரியன் எனற் பெயரில் இன்னொரு மலையாள நடிகை என்ட்ரி ஆகியிருக்கிறார்.

தனது பெயர் குரியன் என்றபோதும், அமலா தற்போது திருமணம் செய்து கொண்டு குறிப்பிடத்தக்க படங்களில் மட்டுமே நடிப்பதால், அமலா என்ற அவரது பெயரை தனது பெயருடன் இணைத்துக்கொண்டு களமறங்கியிருக்கிறார் அமலா குரியன்.

அதோடு, பெரும்பாலும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளைப் போன்று எந்தவித கண்டிசன்களையும் வரிசைப்படுத்தாமல், கதைக்கு தேவையான கிளாமரை காண்பிக்க நான் ரெடி, என்னை வித்தியாசமான கோணத்தில் காண்பிக்க நீங்கள் ரெடியா என்று டைரக்டர்களைப்பார்த்து கேட்பது போல், இந்த படத்தில் நடித்துக்கொண்டே, தனது கவர்சசி ஆல்பத்தையும் கோடம்பாக்கத்தில் சுற்றலில் விட்டிருக்கிறார் அமலா குரியன்.

இந்த படத்தில் அவருடன் நடித்தது பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில், நான் இதுவரை பல நடிகைகளுடன் நடித்திருந்தபோதும்,. இந்த அமலாகுரியனடன் நடித்தது ரொம்ப இயல்பாக இருந்தது.

அவரது தோற்றம் மட்டுமின்றி, நடிப்பும் யதார்த்தமாக இருந்ததால் ரொமான்ஸ் காட்சிகளில் வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து நடித்திருக்கிறேன் என்று சொல்லும் ராமகிருஷ்ணன், இந்த படம் என்னை நலலதொரு ரொமான்டிக் ஹீரோவாகவும் நிரூபிக்கும் என்கிறார். 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions