ராமாநாயுடு இறுதி சடங்கில் 1.5 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்

Bookmark and Share

ராமாநாயுடு இறுதி சடங்கில் 1.5 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்

பிரபல திரைப்பட அதிபர் ராமாநாயுடு நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் ஐதராபாத்தில் பிலிம் சிட்டியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ஏராளமான நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் ராமாநாயுடு உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரால் அறிமுகப்படுத்தபட்ட நடிகைகள் ராமாநாயுடு உடலை பார்த்து கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.

ராமாநாயுடுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது சொந்த மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்து இருந்தனர். அவர்கள் எப்படியும் ராமாநாயுடு உடலை இறுதியாக பார்த்து விடவேண்டும் என்று முண்டியடித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை ஒழுங்கு படுத்தினர்.
இதேபோல் மதியம் 3 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 2.30 மணிக்கே ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் முண்டியடித்தனர்.

அந்த நேரம் நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனிகபூர் மற்றும் மைத்துனர் அனில்கபூர் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.
இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. போலீசார் பலமுறை தடியடி நடத்தி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.

மாலை 4 மணிக்கு ராமாநாயுடு ஸ்டுடியோவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மூத்த மகன் சுரேஷ் பாபு சிதைக்கு தீ மூட்டினார்.
இறுதி சடங்கில் 1½ லட்சம் ரசிகர்கள் திரண்டனர். முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் உள்பட அனைத்து மந்திரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். 


Post your comment





Related News
மறைந்த ராமநாயுடுக்கு சிலை!
13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு
மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி
பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்
தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions