இராமானுஜன் படத்தை ஜனாதிபதி பார்த்தார் : படக்குழுவினருக்கு பாராட்டு

Bookmark and Share

இராமானுஜன் படத்தை ஜனாதிபதி பார்த்தார் : படக்குழுவினருக்கு பாராட்டு

மோகமுள், பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞான.ராஜசேகரன் இயக்கிய படம் இராமானுஜன்.

கணிதமேதை ராமானுஜரின் வரலாற்றுப் படம். இந்தப் படத்தை தமிழ்நாடு கொண்டாடி இருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ மக்கள் வரவேற்பு தரவில்லை. என்றாலும் பல்வேறு பட விழாக்களில் விருதுகளை பெற்று வருகிறது. இதில் சாவித்ரி பேரன் அபிநய், பாமா, சுஹாசினி, நிழல்கள் ரவி நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை பற்றிய குறிப்பை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் இயக்குனர் ஞான.ராஜசேகரன். அதைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி படத்தை பார்க்க விரும்பினார். இதையட்டி கடந்த 26ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் உள்ள மினி தியேட்டரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி படத்தைப் பார்தார்.

பின்னர் அவர் படக் குழுவினரை சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக ராமானுஜனாக நடித்த அபிநய், இயக்குனர் ஞானராஜசேகரன் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions