போதகர் ஆனார் ராமராஜன்!

Bookmark and Share

போதகர் ஆனார் ராமராஜன்!

இனி அம்மா மேடை இல்லை. ஆண்டவர் மேடை.! போதகர் ஆனார் ராமராஜன்.. ஜனவரி 1 முதல்..?

அம்மா இருக்கும் வரை மக்கள் நாயகன் ராமராஜன் அவர்  செல்லப் பிள்ளை.  ஒரு பொதுக் கூட்டத்திற்காக வெளியூர் சென்றபோது பெரிய விபத்தில் சிக்கினார் ராமராஜன். அப்போது துடித்துப் போனார் அம்மா ஜெ., உடனடியாக தரமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர்களை அனுப்பி கவனிக்கச் சொன்னவர் அம்மா.

அதே போல தனது மகன் திருமணம் என்று போய் சொன்னார். பெரிய தொகை ஒன்றை கொடுத்து  அனுப்பினார் அம்மா. இப்படி ராமராஜனுக்கு பார்த்து பார்த்து செய்தவர் ஜெ., அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மனதளவில் மிகவும் தளர்ந்து   போனார் ராமராஜன்.

அதே கவலையில் இருந்தவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. நளினிதான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார். ஆனாலும், மன உளைச்சலில் இருந்தவர். மன நிம்மதி பெற கிறித்துவ மதத்தில் சேர்ந்தார் என்கிறார்கள்.

விவிலியம் முழுக்க படித்துத் தேர்ந்த ராமராஜன் போதனை செய்யக் கற்றுக் கொண்டாராம். இதற்கு நாகேஷ் மகன் ஆனந்த பாபு பெரிதும் உதவினார். போதனை கற்றுக் கொண்டபின் அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தார். இப்போது ஜனவரி முதல் போதனையை துவங்க உள்ளார் என்கிறார்கள்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி ஆராதனைப் பெரு விழாவும்  சுகமளிக்கும் கூட்டமும்  நடக்க உள்ளதாம்.அதில் தான் ராமராஜன் போதனை ஆரம்பிக்கிறார் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

அம்மா,அம்மா என்று முழங்கியவர், இனி அல்லேலூயா என்று முழங்கப் போகிறார். தேவனுக்கே மகிமை.


Post your comment





Related News
காது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்
ஷூட்டிங்கில் கதறி அழுத ராமராஜன்! படக்குழு அப்சட்
இனி தளபதியே தமிழ் நாடு: மக்கள் நாயகன் ராமராஜன் திமுகவில்
ஜெயலலிதாவால் என் கணவர் இப்படி ஆனாரா? பிரபல நடிகை விளக்கம்!
ராமராஜன் உடல்நிலை பற்றி பரவிய திடீர் வதந்தி
தாரை தப்பட்டை அடிக்கும் ராமராஜன்! ருசிகர தகவல்!
நான் சொல்லுர சீன்ஸ் படத்துல இருக்ககூடாது-ராமராஜன்..!
மீண்டும் மேக்கப் குறையாமல் ஹீரோவாக நடிக்க வந்த ராமராஜன்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions