நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை: கனடாவில் பிறந்தது

Bookmark and Share

நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை: கனடாவில் பிறந்தது

1990-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த ரஜினி, விஜய், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஷ்பூரி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார். இவர்களுக்கு 2011-ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர்.

இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல் குழந்தை பிறந்த பிறகு ரம்பா தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமானார். இதனால், கனடாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்புகள் தேடி வந்தார்.

ஆனால், சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தொலைக்காட்சிகளில் நடைபெற்று வந்த நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த ரம்பாவா இது? - புகைப்படம் உள்ளே.!
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ரம்பா விவாகரத்து விஷயத்தில் நடந்த உண்மை என்ன?
தில்லுக்கு துட்டு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மழை வெள்ளத்திற்கு ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
\'தனியொருவன்\' டப்பிங் ஆரம்பம்
இந்திய அளவில் No.1 அஜித் - ஹாலிவுட் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளுவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions