எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு

Bookmark and Share

எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு

நடிகை ரம்பா வீட்டில் நகைகள் திருடுபோனதாக வந்த செய்தி பழைய செய்தி என்றும், தங்கள் வீட்டில் இப்போது எந்த நகையும் திருடு போகவில்லை என கூறியுள்ளார் ரம்பாவின் சகோதரர் சீனிவாசன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது சினிமாவில் நடிக்கவில்லையென்றாலும் டி.வி. ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். மேலும் அவர் தற்போது அவர் கர்ப்பமாகவும் இருக்கிறார். ரம்பாவுக்கு சென்னை மற்றும் ஐதராபாத்தில் வீடு இருக்கிறது. ஐதராபாத் வீட்டில் ரம்பாவின் சகோதரர் சீனிவாஸ் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஐதரபாத்தில் இருந்த சுமார் ரூ.4.5 கோடி மதிப்பிலான ரம்பாவின் நகைகள் மாயமானதாக செய்திகள் வந்தது. இதுப்பற்றி ரம்பாவின் சகோதரர் சீனிவாசனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த செய்தி பழைய செய்தி, தற்போது இதுதொடர்பான விசாரணை,  சென்னை விருகம்பாக்கம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் நடந்து வருகிறது.

ஐதரபாத்தில் நடந்த விசாரணை செய்தியை இங்குள்ளவர்கள் தவறாக புரிந்து கொண்டு இப்போது நகைகள் காணாமல் போய்விட்டதாக செய்திகள் வெளியிட்டு விட்டுவிட்டனர். எங்கள் வீட்டில் எந்த நகையும் மாயமாகவில்லை. தற்போது ரம்பா கனடா சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
கணவருடன் சேர்ந்த ரம்பா செய்த முதல் வேலை என்ன தெரியுமா
விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா
குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!
2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா
ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions