2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா

Bookmark and Share

2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா

நடிகை ரம்பா தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். கடந்த 2010 ஏப்ரலில் கனடாவில் தொழில் அதிபராக உள்ள இந்திரன் பத்மநாதனை மணந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடனேயே கனடாவில் தங்கி விட்டார்.

ரம்பாவுக்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என பெயரிட்டனர். அதன் பிறகு இரண்டாவது தடவையாக கர்ப்பமாக இருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதி அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தற்போது சாஷா என பெயரிட்டுள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படத்தை ரம்பா வெளியிட்டுள்ளார்.

ரம்பாவுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகளும் வெளிவந்தன. அந்த வதந்திகளில் உண்மை இல்லை என்று ரம்பா தரப்பில் மறுக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் விதமாக ஒற்றுமையாக இருக்கும் குடும்ப படமும் இப்போது வெளிவந்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இருந்து ரம்பாவின் நகைகள் திருட்டு போய் விட்டதாக அவரது சகோதரர் போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.


Post your comment





Related News
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
கணவருடன் சேர்ந்த ரம்பா செய்த முதல் வேலை என்ன தெரியுமா
விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா
குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!
ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!
எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions