மகனுடன் நடிக்கும் சிரஞ்சீவி

Bookmark and Share

மகனுடன் நடிக்கும் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம் சரண் நடித்து வரும் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ராம் சரண், சண்டை பயிற்சி கலைஞராக இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தரும் ஸ்டன்ட் மாஸ்டராக இப்படத்தில் நடிக்கும் ராம் சரண் சில நடிகர்களுக்கு சண்டை கற்று தருவது போன்று காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இதில் நடிகர் சிரஞ்சீவியும் நடிக்கப்போவதை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா உறுதி செய்துள்ளார்.இப்படம் அக்டோபரில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவியை திரையில் காண மெகா ஸ்டார் ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். டோலிவுட்டின் பிரபலங்களான பவன் கல்யாண், நாகார்ஜுனா, ரானா டகுபதி ஆகியோரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions