உத்தம வில்லன் யாரையும் புண்படுத்த மாட்டார்: ரமேஷ் அரவிந்த்

Bookmark and Share

உத்தம வில்லன் யாரையும் புண்படுத்த மாட்டார்: ரமேஷ் அரவிந்த்

கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படம் மே 1-ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இந்து கடவுளான பெருமாளை கிண்டல் செய்யும் காட்சிகள் இருப்பதாகவும், இதனால் இந்துக்கள் மனம் புண்படும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று விஷ்வ இந்து பரிசத் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதே கருத்தை ஆதரித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடாரஹீமும் புகார் கொடுத்துள்ளார். இவர் ஒருபடி மேலே சென்று மதங்களை இழிவுபடுத்தி படம் எடுக்கும் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இது குறித்து படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் உத்தம வில்லன் படத்தில் இடம்பெறவில்லை. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கூத்து கலைஞனுக்கும் தற்கால சினிமா நடிகருக்குமான ஒரு வாழ்க்கையும், தொடர்பையும் சொல்லும் கமர்ஷியல் படம்.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து, பாராட்டி எந்த கட்டும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல் படம் திட்டமிட்டபடி வெளிவரும் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions