தமிழில் தொடர்ந்து படம் இயக்க ஆசைப்படும் ரமேஷ்அரவிந்த்!

Bookmark and Share

தமிழில் தொடர்ந்து படம் இயக்க ஆசைப்படும் ரமேஷ்அரவிந்த்!

மனதில் உறுதி வேண்டும் படத்துக்காக கே.பாலசந்தரால் கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் நடிகர் ரமேஷ்அரவிந்த். அதன்பிறகு வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். பின்னர் கமலுடன் இணைந்து சதிலீலாவதி படத்திலும் நடித்தார்.

ஆனபோதும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அவர் பரவலாக நடித்து வந்ததால் தமிழில் அவரால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

அதோடு, கன்னடத்தில் ராம ஷாம பாமா என்ற படத்தை முதன்முதலாக இயக்கி நடித்த ரமேஷ்அரவிந்த், அந்த படத்தில் கமலையும் நடிக்க வைத்தார்.

அதையடுத்து சத்யவான் சாவித்ரி, ஆக்சிடென்ட் உள்பட சில படங்களை தானே இயக்கி நடித்தார். இந்தநிலையில்தான், தற்போது கமலை வைத்து உத்தமவில்லன் படத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ்அரவிந்த்.

அதோடு தன்னை தமிழுக்கு கொண்டு வந்த கே.பாலசந்தரையும் இந்த படத்தில் நடிக்க வைத்து பெருமை சேர்த்திருக்கிறார் ரமேஷ்அரவிந்த்.

தற்போது உத்தமவில்லன் ரிலீசுக்கு தயாராகி விட்டதால், அடுத்தடுத்து தமிழில் ஒருநிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அவர், யாராவது இளவட்ட ஹீரோக்கள் கால்சீட் கொடுத்தால் படம் இயக்கவும் தயாராக இருக்கிறாராம்.

உத்தமவில்லன் திரைக்கு வந்தபிறகுதான் அதற்கான முயற்சிகளில் இறங்க திட்டமிட்டிருக்கிறாராம் ரமேஷ்அரவிந்த்.

மேலும், இந்த ரமேஷ்அரவிந்த் கன்னட நடிகராக இருந்தபோதும், அவர் தமிழர்தான். தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணம்தான் அவரது பூர்வீகமாகும்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions