பண்டிகையாக மாறிய ஏப்ரல் 2

Bookmark and Share

பண்டிகையாக மாறிய ஏப்ரல் 2

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்த 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் 2 -ஆம் தேதி ரிலீசாகவிருந்தது. தற்போது இந்தப்படத்தின் வெளியீட்டும் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் தகவலின்படி, ஏப்ரல் 10 அன்று உத்தமவில்லன் படம் வெளியாக உள்ளது. உத்தமவில்லன் தள்ளிவைக்கப்பட்டதால் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக உள்ள உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நண்பேன்டா' படம் கூடுதல் தியேட்டர்களில் வெளியாகிறது.

அதேநாளில்  'ஜெயம்' ரவி நடித்துள்ள 'பூலோகம்' படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் படமும் ஏப்ரல் 2 அன்று வெளியாகிறது.

இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருந்தது கார்த்தி நடித்துள்ள 'கொம்பன்' படம் .  இப்படத்தை ஒரு வாரம் தள்ளி எப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். 'குட்டிப்புலி' படப் புகழ் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க இவர்களுடன் ராஜ்கிரண், கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஏப்ரல்  2 அன்று நண்பேன்டா, சகாப்தம், கொம்பன், பூலோகம் என நான்கு படங்கள் வெளியாவதால் பண்டிகை எஃபெக்ட் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions