பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்கும் டைரக்டர் ரமேஷ் ரங்கசாமி!

Bookmark and Share

பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்கும் டைரக்டர் ரமேஷ் ரங்கசாமி!

இர்பான்-சிங்கம்புலி நடிப்பில் வெளியான பொங்கி எழு மனோகரா படத்தை இயக்கியவர் ரமேஷ் ரங்கசாமி. காதல், காமெடி கலந்து உருவாக்கப்பட்ட அந்த படத்தை அடுத்து, அவருக்கு உடனடியாக புதிய படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதனால் தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அவர். மேலும், முதல் படத்தை இர்பானை வைத்து இயக்கிய ரமேஷ் ரங்கசாமி, தனது அடுத்த படத்தை பிரபல ஹீரோ ஒருவரை வைத்து இயக்குகிறாராம்.

அப்படம் இப்போதைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறதாம். அதுபற்றி ரமேஷ் ரங்கசாமி கூறுகையில், எனது முதல் படம் மிகப்பெரிய ஹிட் இல்லை. ஆனாலும் வெற்றி பெற்றது.

அதோடு நல்ல படம் என்று விமர்சிக்கப்பட்டது. அந்த வகையில், பொங்கி எழு மனோகரா படத்தை பார்த்த ஒரு தயாரிப்பாளர்தான் என்னை தொடர்பு கொண்டு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அதோடு, முன்னணி ஹீரோ வைத்து இயக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் விமல், விக்ரம்பிரபு மாதிரியான நடிகர்களை வைத்து இயக்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

அவர்கள் மட்டுமின்றி இன்னும் சில வளர்ந்துவரும் ஹீரோக்களிடமும் கால்சீட் கேட்டிருக்கிறேன். அவர்களில் யார் முதலில் கால்சீட் கொடுத்தாலும் உடனடியாக படத்தை ஆரம்பித்து விடுவேன் என்கிறார்.

 


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions