வசனங்களே இல்லாத படம் எடுக்கும் சர்ச்சை இயக்குநர்

Bookmark and Share

வசனங்களே இல்லாத படம் எடுக்கும் சர்ச்சை இயக்குநர்

சர்சைகளுக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா அண்மையில் தனது பிறந்த நாளை முன்னிட்டும் தான் ஏற்கனவே இறந்து விட்டதாக ஒரு வீடியோவை வெளியீடு சர்ச்சயைக் கிளப்பினார்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும் அதிக சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்துள்ளவர் என்றே பெரும்பாலும் அறியப்படுகின்றார்.
இவர்  வசனங்களே இல்லாத படம் எடுக்க தற்போது முயற்சி செய்து வருகின்றாராம்.

வசனங்களே இல்லாத படம் திரை உலகிற்கு புதிது இல்லை என்றாலும் தொழில்நுட்ப மறுபாடுகளின் காரணமாக அந்த வகையிலான படங்கள் மறைந்து விட்டன. திரை படங்கள் முதலில் திரையிடப்பட்ட போது அவற்றில் வசனங்களே இடம் பெற்றிருக்காது.

வசனங்களே இல்லாமல் இன்றும் ரசிக்கப்படும் படங்கள் சார்லி சாப்லினின் படங்களே. வசனங்களே இல்லாமல் உடல் மொழியாலும் பாவனைகளாலும் வசனங்களை புரிய வைக்கும் சார்லி சாப்லினின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவை.  

அந்த வகையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு சைலண்ட் என பெயரிட்டுள்ளார். மொழி சார்ந்தில்லாத இப்படத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிடவும் ராம் கோபால் வர்மா திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!
ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions