ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை- கிண்டலடித்த ராம்கோபால் வர்மா!

Bookmark and Share

ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை- கிண்டலடித்த ராம்கோபால் வர்மா!

எப்போதும் ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இப்போது சென்னை மழையை பற்றியும், அதற்கு நிதியுதவி அளித்த நடிகர்கள் பற்றியும் நக்கலாக பேசி வம்புக்கு இழுத்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் முதல் சிவார்த்திகேயன் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களை கிண்டல் செய்யும் வகையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தன் டுவிட்டரில் “சூப்பர் ஸ்டார்கள் கொடுத்த ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பி போய் உள்ளனர். 

இதற்கு அவர் நன்கொடை தராமலே இருந்திருக்கலாம். ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை என்று எண்ணும்போது நான் வியக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் , “ நான் ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளித்தது கிடையாது. குவிண்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி” என்று மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்.


Post your comment





Related News
ராம் கோபால் வர்மா இறந்துவிட்டாரா- அவரே ஷேர் செய்த மீம்ஸ்
சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு
பெண்களை இழிவுப்படுத்திய ராம் கோபால் வர்மா
வசனங்களே இல்லாத படம் எடுக்கும் சர்ச்சை இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions