’தனி ஒருவன்’ தான் கடைசி படம் : ஒரு உன்னத கலைஞனின் வருத்தம்!

Bookmark and Share

’தனி ஒருவன்’  தான் கடைசி படம் : ஒரு உன்னத கலைஞனின் வருத்தம்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஃபிலிம் ரோல்களில் காட்சிகள் படமாக்கப்பட்டும் வழக்கம் அழிந்துவிட்டது. இந்நிலையில் தனி ஒருவன் படம் தான் ஃபிலிம் ரோலில் எடுக்கப்பட்டஎன்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி தெரிவித்துள்ளார்.

பருத்தி வீரன், ராம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் , உள்ளிட்ட பல படங்களுக்கு தன்னுடைய வித்யாசமான ஒளிப்பதிவால் இயக்குநரின் கதைகளுக்கு உயிர் கொடுத்தவர் ராம்ஜி. 

அவர் கூறுகயில் “இதுவரை நான் அனைத்து படங்களையும் ஃபிலிம் ரோலில் தான் படமக்கியுள்ளேன். ஆனால் அது இனி முடியாது. மேலும் இது குறித்து கூறுகையில்,. “என்னுடைய முதல் படம் ’வள்ளல்‘ முதல் “தனி ஒருவன்” படம் வரை ஃபிலிம்மில் தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்.

 “தனி ஒருவன்” படம் தான் ஃபிலிமில் நான் பதிவு செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். இனி ஃபிலிம் வருமா வராதா என தெரியவில்லை, ஹாலிவுட்டில் இன்றும் ஃபிலிம்தான் பயன் படுத்துகிறார்கள்.

ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்யும்போது கிடைக்கும் அழுத்தம் டிஜிட்டலில் வருவது கஷ்டம் தான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஃபிலிம் வரும் என்கிறார்கள், பார்க்கலாம்” என ஒளிப்பதிவாளர் ராம்ஜி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக தனி ஒருவன் படத்திற்காக வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் மோகன் ராஜாவுடன் ராம்ஜி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions