பாம்பன் பாலத்தில் ராம்கி!

Bookmark and Share

பாம்பன் பாலத்தில் ராம்கி!

மாசாணி, பிரியாணி படங்களுக்குப்பிறகு ரீ-என்ட்ரியாகியிருக்கும் செந்தூரப்பூவே ராம்கி, சில ஆண்டுகளாக சரியான படவாய்ப்புகள் இல்லாததால், தனது உடம்பை பராமரிக்காமல் விட்டு விட்டார்.

ஆனால், இப்போது சில புதிய படங்களுக்காக மீண்டும் ஜிம்முக்கு செல்கிறாராம். அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு சண்டை காட்சிகளெல்லாம் இருப்பதால், மீண்டும் பழைய ராம்கியை கண்முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தனது தோற்றத்தை இளமையாக மாற்றும் முயற்சியில் மும்முரமாகியிருக்கிறார் ராம்கி.

குறிப்பாக, ஒரு புதிய படத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறாராம். அதனால், தனது நடைஉடைகளில் கம்பீரம் தெரிய வேண்டும் என்பதற்காக தினமும் யோகா பயிற்சியும் எடுக்கிறாராம் ராம்கி.

மேலும், தண்ணீருக்குள் அதிக நேரம் முங்கியிருந்தபடியும் சில பயிற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம். இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு பாம்பன் பாலத்தில் சமூகவிரோதிகளுடன் அவர் பயங்கரமாக மோதிக்கொள்ளும் சண்டை காட்சி ஒன்று நடைபெற உள்ளதாம்.

கிட்டத்தட்ட விஜயகாந்த் நடிக்கும் சண்டை காட்சிக்கு இணையாக அந்த பைட் சீன் படமாவதால் இந்த படத்திற்கு பிறகு என்னைத்தேடி நிறைய போலீஸ் வேடங்கள் வரும் என்று கூறுகிறார் ராம்கி.

 


Post your comment





Related News
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!
நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ஆங்கிலப்படம்
ராம்கியின் ஆங்கில படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஒரேநாளில் மோதும் கார்த்தி & ராம்கி!
ராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது!
படப்பிடிப்பில் உயிர் தப்பிய நடிகர் ராம்கி!
அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராம்கி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions