ரம்யாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்

Bookmark and Share

ரம்யாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினிகளில் ஒருவர் ரம்யா, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒண், நட்சத்திர பேட்டி இப்படி ரம்யா தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே கிடையாது. அதுபோல நட்சத்திர கலை இரவுகள், சினிமா நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேடையிலும் தொகுத்து வழங்குவார்.

சினிமாவில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் ரம்யாக்கு நல்ல நண்பர்கள். பல முக்கியமான இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் படத்தில் நடிக்க கேட்டபோது மறுத்து வந்த ரம்யா, இப்போது மணிரத்னம் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்து விட்டார். படத்தில் துல்கர் சல்மானின் தோழியாக படம் முழுக்க வருகிறார் ரம்யா.

"எனக்கு நடிக்கத் தெரியாது. நடிப்பின் மீது பெரிய ஆர்வமும் இல்லை. ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை மீடியாக்கு அனுப்பும்போதே நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடுதான் அனுப்பினார்கள்.

அதனால்தான் பல வாய்ப்புகளை தவிர்த்தேன். ஆனால் திடீரென்னு மணி சார் என் படத்தில் நீ நடிக்கணும்னு சொன்னப்போ எனக்கு மறுத்து பேச முடியல. வீட்டில் டிஷ்கசன் பண்ணினேன் உடனே கிரீன் சிக்னல் கொடுத்தாங்க நடிச்சிட்டேன்.

தொடர்ந்து  நடிக்கிறதுல பிரச்னை இல்லை. ஆனால் முக்கியமான கேரக்டராக இருக்கணும், அது எனக்கு பிடிக்கணும், என்னால் நடிக்க முடிகிற கேரக்டரா இருக்கணும் இத்தனையும் தாண்டி வந்தால் நடிக்கலாம். ஹீரோயின் பிரண்டு, அக்கா, தங்கை கேரக்டர்கள்ல சும்மா நடிக்க முடியாது" என்கிறார் ரம்யா


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions