நடனப் போட்டிகளில் குதிக்க ரம்யா முடிவு

Bookmark and Share

நடனப் போட்டிகளில் குதிக்க ரம்யா முடிவு

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சின்னத்திரையிலும், பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரம்யா நடனம், நடிப்பு எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.

பல இயக்குனர்கள் நடிக்க கேட்டும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது திருமணத்துக்கு பிறகு நடனம், நடிப்பு இரண்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் தோழியாக நடித்துள்ளார்.

நடிப்பை தொடர்ந்து இப்போது நடனத்திலும் குதித்திருக்கிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரம்யா முதன் முறையாக அந்த நிகழ்ச்சியில் ஆடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் 12 வருடமாக முறைப்படி கிளாசிக்கல் நடனம் கற்றவள். சின்னத்திரை தொகுப்பாளினியான பிறகு நடனத்தை கைவிட்டு விட்டேன். என்றாலும் நடன இயக்குனர் சாண்டி ஒரு கான்செப்டை சொல்லி நீ கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்த கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன். நான் நன்றாக ஆடியதாக எல்லோரும் சொன்னார்கள். அதனால் தொடர்ந்து ஆடவும் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்றார் ரம்யா.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions