
படையப்பா ரம்யா கிருஷ்ணனுக்கு சமீபகாலமாக சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை. கடைசியாக தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதையடுத்து, இப்போது தமிழ், தெலுங்கில் ராஜமெளலி இயக்கியுள்ள பாகுபலி படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
மற்றபடி சினிமாக்களில் தான் எதிர்பார்ப்பது போன்று வெயிட்டான வேடங்கள் வருவது குறைந்து வருவதினால்தான் சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
இந்த நிலையில், முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் ரப் அண்ட் டப்பாகவே காணப்படும் ரம்யா கிருஷ்ணன், இப்போது எந்த தளத்துக்கு சென்றாலும், யாராவது நண்பர்கள் பேசுவதற்கு சிக்கினால் மணிக்கணக்கில் மனம் விட்டு பேசுகிறாராம்.
அதோடு அவர்கள் ஏதோ பேச்சுக்காக கடி ஜோக்குகள் சொன்னால்கூட என்னமோ மிகப்பெரிய ஜோக் அடித்தது போன்று விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் ரம்யா கிருஷ்ணன்.
அதைப்பார்த்து ஒன்றுமே இல்லாத ஜோக்கிற்கே இப்படி சிரிக்கிறாரே, இவரிடம் பெரிய ஜோக்குகளை சொன்னால் சிரிப்பை நிறுத்தவே மாட்டார் போலிருக்கு என்று மிரண்டு ஓடுகிறார்களாம்.
Post your comment