முதன்முறையாக பேயாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

Bookmark and Share

முதன்முறையாக பேயாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

கடந்த வருடம் வெளிவந்த பெரிய அளவில் வெற்றியடைந்த ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் கணவரும், பிரபல தெலுங்கு இயக்குனருமான கிருஷ்ண வம்சி இயக்கும் ‘ருத்ராக்ஷா’ என்ற தெலுங்கு படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேயாக நடிக்கவிருக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன் இதுவரை அம்மன், குணச்சித்திரம், வில்லி ஆகிய கதாபாத்திரங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் பேயாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரம்யா கிருஷ்ணன் பேயாக நடிக்கவிருக்கும் ‘ருத்ராக்ஷா’ படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

மேலும், படத்தின் நடிக்கும் பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions