அம்மாவாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!

Bookmark and Share

அம்மாவாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது.இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படியிருக்கும் என்ற யூகத்தோடு அந்த போஸ்டர் வெளிவந்தது. இவரை மட்டுமில்லாது, அஜித், விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்டவர்களின் முகத்தையும் பிரபலங்களின் உடலோடு பொருத்தி போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இவற்றில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறும்போது, நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது? என்று கேட்டுள்ளார்கள்.

அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான். அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான்.

நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்..


Post your comment





Related News
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions