இளம் ஹீரோயின்களுக்கு ரம்யா கிருஷ்ணனின் கேள்வி?

Bookmark and Share

இளம் ஹீரோயின்களுக்கு ரம்யா கிருஷ்ணனின் கேள்வி?

தமிழ்த் திரையுலகில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் 1983ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன் பின் “படிக்காதவன், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சிகரம், வானமே எல்லை உட்பட சில முக்கியமான படங்கள் தவிர பல படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா நீலாம்பரி அவரை மிகவும் பேச வைத்தது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் சுமார் 50 படங்களிலும், மற்றும் கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரம் அவரைப் பற்றி இந்தியத் திரையுலகில் மீண்டும் பேச வைத்துள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் 10 படங்களுக்கு மேல் நடித்தும் இன்றைய இளம் ஹீரோயின்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதைப் பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“எங்களது காலத்தில் சில காட்சிகளில் நடிப்பதற்குப் பயமாக இருக்கும். ஒரு மரியாதையுடன் இருந்து ஒரு காட்சி முடிந்ததும் , அடுத்த காட்சியில் நடிப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம்.

இப்போது போல ஒரு காட்சி முடிந்ததும் போய் கேரவனில் அமர்ந்து கொள்வதில்லை. ஆனால், இப்போது நடிகைகளை உயர்த்திக் காட்டும் கதைகளும் அதிகம் வருவதில்லை.

அந்தந்த மொழிகளை தெரிந்து வைத்துக் கொள்ளாதவரை நடிப்பது கஷ்டம்தான். முதலிரண்டு படங்களில் நடிக்கும் போது அந்த மொழியைத் தெரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால் பத்து படங்களில் நடித்த பிறகும் அவர்கள் அந்த மொழியை ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை,” என்கிறார்.

ரம்யா கிருஷ்ணனின் கேள்வி நியாயமானதுதான். ஹிந்தியிலிருந்து வந்த பல ஹீரோயின்கள் தமிழில் பத்து படங்களுக்கு மேல் நடித்திருந்தும் இன்னும் தமிழைப் பேசாமலே இருக்கிறார்கள்.

அதை விட கொடுமை தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த சில நடிகைகள் கூட தமிழைப் பேசாமல் இருக்கிறார்களே, அது என்னவென்று சொல்வது?


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions