டிவிட்டருக்கு வந்த ரம்யாகிருஷ்ணன்

Bookmark and Share

டிவிட்டருக்கு வந்த ரம்யாகிருஷ்ணன்

படையப்பா நீலாம்பரியை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன ?. ரஜினிகாந்த் எப்படி மக்கள் மனதில் இன்றும் கோலோச்சிக் கொண்டிருக்கிறாரோ, அதே அளவிற்கு அவரை எதிர்த்து நடித்தவர்களும் புகழ் மங்காமலே இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு  படைப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினிக்கு மிகச் சிறந்த எதிர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்போது 'வம்சம்' தொடரின் மூலம் டிவி ரசிகர்களிடத்திலும், பெண்களிடத்திலும் தனி இடத்தைப் பிடித்து வருகிறார்.

இந்தக் கால ஹீரோயின்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கலக்கிக் கொண்டிருக்க 80களின் ஹீரோயின்கள் அதில் அதிகமாக இறங்காமல் இருந்தார்கள். ராதிகா, ஸ்ரீதேவி போன்ற ஒரு சிலரைத் தவிர இன்னும் பலர் சமூக வலைத்தளம் பக்கம் வராமலே இருக்கிறார்கள்.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அது செலவேயில்லாத ஒரு விளம்பரம் என்பதை உணர்ந்து வருகிறார்கள். அந்த விதத்தில் டிவிட்டருக்கு புது வரவாக ரம்யா கிருஷ்ணன் வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

@meramyakrishnan என்ற பெயரில் கணக்கு ஆரம்பித்து, “கடைசியாக என்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை ஆரம்பித்துவிட்டேன்,” என்று சொல்லி நுழைந்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்,  பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions