எதிர்பார்ப்பு இல்லாத ரம்யா நம்பீசன் !

Bookmark and Share

எதிர்பார்ப்பு இல்லாத ரம்யா நம்பீசன் !

தெரிந்த முகமாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் இல்லாத நடிகையாக இருந்தாலும் பெறவாயில்லை அப்படியொரு நடிகை வேண்டும் என்று தேடியபோது தான் பீட்சா படத்திற்காக ரம்யா நம்பீசனை புக் பண்ணினர். அந்த படமும் மெகா ஹிட்டானது.

அதிலிருந்து விஜயசேதுபதியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பாயத் தொடங்கியது. ஆனால், ரம்யா நம்பீசனையோ யாருமே கண்டுகொள்ளவில்லை. அது வரைக்கும் தனக்கு ஒரு ஹிட் தேவை என்று சொல்லிக்கொண்டிருந்த ரம்யா, ஹிட் படத்தில் நடித்தும் தன்னை கோலிவுட்டில் யாருமே கண்டு கொள்ளாததால் மீண்டும் தாய்மொழியான மலையாளத்துக்கே சென்று விட்டார்.

அப்படி சென்றவரை, ரெண்டாவது படம், நாலு போலீசும் நல்லா இருந்து ஊரும் என்ற படங்களுக்காக மீண்டும் அழைத்து வந்தனர். இதில் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் மே-22ந்தேதி திரைக்கு வருகிறது.

ஆனால் அந்த படம் குறித்து ரம்யா நம்பீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லையாம். மற்ற நடிகைகளுக்கெல்லாம் நடிக்கிற படங்கள் ஹிட்டானால் மார்க்கெட் எகிறும்.

ஆனால் எனக்கு அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் இப்போது நான் பெரிதாக எந்த படத்தையும் எதிர்பார்ப்பதில்லை. நடித்துக்கொடுப்பதோடு என் வேலை முடிந்து விடுகிறது என்று நினைத்துக்கொள்கிறேன் என்கிறார் ரம்யாத நம்பீசன்.


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions