கன்னடத்திலும் பாடுகிறார் ரம்யா நம்பீசன்

Bookmark and Share

கன்னடத்திலும் பாடுகிறார் ரம்யா நம்பீசன்

மலையாள நடிகையான ரம்யா நம்பீசன், பீட்சா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டவர்.

மேடை கச்சேரிகளும் செய்திருக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் பாடி வருகிறார். தட்டயன் மரத்து படத்தில் ரம்யா பாடிய "முத்துசிப்பி போலொரு..." என்ற பாடலுக்கு விருதுகள் கிடைத்தது.

அதன் பிறகு தெலுங்கு படங்களுக்கு பாடினார். தமிழில் பாண்டியநாடு படத்தில் "பை பை கலாசி பை..." பாடினார். அது பாப்புலராகவே தற்போது சாகசம் படத்தில் சிம்புவுடன் பாடியிருக்கிறார். அடுத்ததாக கன்னடத்திலும் பாடி இருக்கிறார்.

பாண்டிய நாடு படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அதில் பை பை கலாசி பை பாடலை. "டிரை டிரை..." என்று பாடியிருக்கிறார். படம் ரிலீசுக்கு முன்பே அங்கும் பாட்டு ஹிட்.

எனவே கன்னடத்தில் பாடும் வாய்ப்புகள் குவிகிறது ரம்யாவுக்கு. பாடகியான ரம்யா ஒரு நல்ல டான்சரும்கூட சலங்கை ஒலி, சங்கராபரணம், மயூரி மாதிரி ஒரு நாட்டிய படத்தில் பாடிக் கொண்டே நடிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

தற்போது மலையாளத்தில் சொக்காசுப்பு, ஜிலேபி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். "பாட்டு ஒரு கண் என்றால் நாட்டியம் இன்னொரு கண். மூன்றாவதுதான் சினிமா" என்பா ரம்யா நம்பீசன். 


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions