நொண்டிச்சாக்கு சொல்கிறாரா ரம்யா நம்பீசன்..?

Bookmark and Share

நொண்டிச்சாக்கு சொல்கிறாரா ரம்யா நம்பீசன்..?

என்ன ஆச்சு நடிகை ரம்யா நம்பீசனுக்கு..? கடந்த 2013ல் மொத்தம் பத்து படங்களில் நடித்து அதிகப்படங்களில் நடித்த நடிகை என பெயரை தட்டிச்சென்றவருக்கு, கடந்த வருடம் வெளியானது 'டமால் டுமீல்' என்கிற ஒரே படம் மட்டும் தான்.

கேட்டால் நான் நடித்து முடித்த ஒன்றிரண்டு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் இந்த வருடத்தில் வரிசையாக வெளியாகும் என்கிறார். அதுமட்டுமல்ல, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடுவதில் பிசியாகிவிட்டேனே என படங்கள் வெளியாகாததற்கு சாக்குப்போக்கு சொல்கிறார் ரம்யா நம்பீசன்.

ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாச்சு. அவரது தாய்மொழியான மலையாளத்தில்.. 'இவன் மெகாரூபன்' என்ற படத்தில் இவர் பாடிய 'ஆண்டலோண்டே' என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது.

அதன்பின்னர் தேசியவிருதுகள் பெற்ற 'தட்டத்தின் மறயத்து' படத்தில் இவர் பாடிய 'முத்துச்சிப்பி' என்ற பாடல் ஒரு கட்டத்தில் கேரளாவின் தேசியகீதம்போல திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. போதாததற்கு, தமிழிலும் 'பாண்டிய நாடு' படத்தில் இவர் பாடிய 'ஃபை ஃபை ஃபை' பாடல் இங்கே ஹிட்டாகிவிட்டாலும் கூட, 'டமால் டுமீல்', 'சகாப்தம்' படங்களைத்தவிர வேறு எதிலும் அவர் பாடவில்லையே..  ஆனால் கன்னடத்தில் 'பாண்டிய நாடு' ரீமேக்கான 'ருத்ர தாண்டவம்' படத்தில் பாட அழைப்புவர அங்கே போய் 'ட்ரை  ட்ரை ட்ரை' என பாடிவிட்டு வந்திருக்கிறார்.

மலையாளத்தில் 'நெல்லிக்கா' என்கிற படத்திலும் பாடியுள்ளார். ஆனால் இந்தவருடம் நம்பிக்கை தரும் விஷயமாக அவர் நடித்த 'ரெண்டாவது படம்', மற்றும் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

இதுதவிர மலையாளத்தில் ஜெயசூர்யாவுடன் 'ஜிலேபி' மற்றும் 'லுக்கா சிப்பி' ஆகிய படங்களில் கதாநாயகியாகவும், மோகன்லால் நடிக்கும் 'லைலா ஓ லைலா' படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions