ரம்யா நம்பீசனை மறக்காத விஜய்சேதுபதி

Bookmark and Share

ரம்யா நம்பீசனை மறக்காத விஜய்சேதுபதி

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்களுடன் மட்டுமே மீண்டும் கூட்டணி சேருவார்கள் ஹீரோக்கள். விஜய்சேதுபதி இந்த விஷயத்தில் விதிவிலக்கு. அவர் நடித்த தோல்விப்படமான பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, மெல்லிசை, ஆரஞ்ச் மிட்டாய் என அரைடஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருப்பது அருண்குமார் இயக்கும் படத்தில்தான்.

இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி! அதற்காக விரைவில் போலீஸ் கட் முறுக்கு மீசை என தன் கெட்டப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

இயல்பிலேயே மற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் விஜய்சேதுபதி.பீட்சா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசனுக்கு தற்சமயம் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் இல்லை.

இதை தெரிந்து கொண்ட விஜய்சேதுபதி இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசனை சிபாரிசு செய்திருக்கிறார்.  தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்த இடத்தில் உள்ள விஜய் சேதுபதி தன்னை அவருக்கு ஜோடியாக நடிக்க சிபாரிசு செய்தது தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தாராம் ரம்யா நம்பீசன்! 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions