
ராணா டகுபதி நடிக்கும் இந்தியாவின் முதல் போர் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய படம் இன்று துவங்கியது. பாகுபலி புகழ் ராணா டகுபதி நடிப்பில், ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் "கஸி" படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதனை ராணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 1971இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் "கஸி" மூழ்கடிக்கப்பட்டது.
அப்போது நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது,முதல் நீர்மூழ்கிக் கப்பலை பற்றிய இந்திய திரைப்படம். இப்படத்தை சன்கல்ப் எனும் அறிமுக இயக்குநர் தான் எழுதிய ப்ளூ பிஷ் புத்தகத்தை தழுவி எடுக்கவுள்ளார்.
இச்சம்பவத்தால் பெரிதும் கவரப்பட்ட சன்கல்ப் காபி ரைட்ஸ் பிரச்னையைத் தடுப்பதற்காக, முதலில் இதைப்பற்றி புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் போது 18 நாட்கள் நீரின் அடியில் இருந்த இந்தியத் தலைமைக் கடற்படை வீரர் மற்றும் அவரது குழுவைப் பற்றிய படமாக உருவாகுகிறது 'கஸி'.
இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்க, இந்தியக் கடற்படை வீரராக நடிக்கிறார் ராணா. டாப்ஸி நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிவிபி சினிமாஸ் தயாரிப்பிலேயே ராணா இந்த வருடம் நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post your comment