கோவா கடற்கரையில் ராணாவுடன் திரிஷா..!

Bookmark and Share

கோவா கடற்கரையில் ராணாவுடன் திரிஷா..!

தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இடையில் கொஞ்சம் பிரிந்திருந்த அவர்கள் மீண்டும் பொது இடங்களில் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த பட விழாவுக்கு சேர்ந்தே சென்றார்கள். அங்கு நடந்த விருந்தில் கைகோர்த்து நெருக்கமாக நடனம் ஆடியது சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்காகவே த்ரிஷா புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்று செய்திகள் வந்த வண்னம் உள்ளன. அது உண்மைதான் என்பது போல த்ரிஷாவும், ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்துக் கொண்டே ஜாலியாக ஊர் சுற்றிய படங்கள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அங்குள்ள ஒரு பெரிய ஹோட்டலில் இருந்து திரிஷாவை ராணாவும் கைகோர்த்தபடி உற்சாகத்துடன் வெளியில் செல்வது போல  உள்ள புகைப்படங்களும் லீக்காகி உள்ளன.

இதன் மூலம் இருவரும் ஒன்றாக சுற்றுவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions