முதன்முறையாக ரீல் திருமணம் செய்யும் ராணா

Bookmark and Share

முதன்முறையாக ரீல் திருமணம் செய்யும் ராணா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் வெற்றி நாயகியாக ஜொலிக்கும் நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட வகையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் ராணாவை ஆரம்பம் படத்தின் வாயிலாக நடிகர் அஜித் தமிழ் ரசிகர்களுக்கு மேலும் பரிட்சயப்படுத்தினார்.

ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து  மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ராணா ஒப்பந்தமாகியுள்ளார். பெங்களூர்டேஸ் படத்தில் நடித்த பார்வதி மேனன் அதே வேடத்திலேயே தமிழிலும் நடிக்கிறார்.

மலையாளத்தில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஸிம் நடித்த முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர்யா, பாபிசிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்கள். மேலும் பஹத் ஃபாசில் பாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.

தெலுங்கில் 'பொம்மரீலு' படத்தினை இயக்கிய இயக்குனர் பாஸ்கர் இப்படத்தினை இயக்குகின்றார். இப்படத்தில் தான் நடிகர் ராணா முதல் முறையாக மணக்கோலத்தில் நடிக்கின்றார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கின்றார். நடிகர் ராணாவின் ரீல் திருமண புகைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நடிகர் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions