பாகுபலி தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ராணா!

Bookmark and Share

பாகுபலி தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ராணா!

ராணா டகுபதி நடிப்பில் சமீபத்தில் வந்த மிகப்பெரிய பட்ஜெட் படம் ‘பாகுபலி’. இப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் சரித்திர பின்னணியில் நடக்கும் திரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற நீர்மூழ்கி கப்பல் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகவிருக்கிறது. இப்படம் சங்கல்ப் என்பவர் இயக்குகிறார். இவர் எழுதிய ‘Blue Fish’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாவதால், மூன்று மொழிகளுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் ஒருவர் தேவைப்பட்டதால் இப்படத்தில் ராணா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ராணா இப்படத்தில் கப்பற்படை அதிகாரியாக நடிக்கிறார். எஸ்21 என்ற இந்திய நீர்மூழ்கி கப்பலின் அதிகாரியாக நடிக்கிறார். நீர்மூழ்கி கப்பலை மையப்படுத்தி இந்தியாவில் உருவாகும் முதல் படம் இதுவாகும்.

இப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு டாப்சி, ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions