நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

Bookmark and Share

நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.

இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.

இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-“திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.

அடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.”

இவ்வாறு ராணா கூறினார். 


Post your comment

Related News
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions