ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்து தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர், ஸ்ரேயா. தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட பல கதாநாயகர்களுடன் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் வசூல் சாதனை படைத்த ‘திரிஷ்யம்’ படத்தை இந்தியில் எடுத்தபோது அதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஸ்ரேயாவுக்கு தற்போது 33 வயது ஆகிறது. புதிதாக பட வாய்ப்புகளும் இல்லை. இதனால் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரேயாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் சமீப காலமாக ஜோடியாக படவிழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். பேஷன் ஷோ ஒன்றில் கைகோர்த்து நடந்தார்கள். விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரே காரில் சேர்ந்தே வருகிறார்கள்.

இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். ராணா ஏற்கனவே நடிகை திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணாவுடனான காதல் கிசுகிசுக்களுக்கு ஸ்ரேயா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
‘‘நடிகர் ராணாவை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நான் முதலாவதாக தெலுங்கில் வெங்கடேசுடன் நடித்துத்தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். நான் இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கி இருந்தேன்.
‘‘நடிகர் ராணாவை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நான் முதலாவதாக தெலுங்கில் வெங்கடேசுடன் நடித்துத்தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். நான் இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கி இருந்தேன்.
அப்போது ராணாவும் இந்தியில் நடிப்பதற்காக அடிக்கடி அங்கு வந்தார். இருவரும் சந்தித்துக்கொண்டோம். வெளியே ஒன்றாக சென்றோம். இதை வைத்து எங்களுக்குள் காதல் என்று வதந்தி பரப்பி விட்டனர். நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். வேறு எந்த உறவும் இல்லை.’’
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries